தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளதாகவும் திருவாரூரில் இருந்து அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
செய்தியாளர்களை இன்று(ஜூன் 20) சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “எதிர்பாராத மழையின் காரணமாக மழைநீர் செல்வதற்கான வடிகால்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் தேங்கியது. நேற்று காலை 11 மணி முதல் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்காக திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே தான் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மக்களுக்கு எந்த வித இடர்பாடுகளும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரே நேரடியாக கைப்பேசியில் தொடர்பு கொண்டு கலைஞர் கோட்ட திறப்பு விழாவை காணொலியில் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு எந்த வித கஷ்டங்களும் வந்துவிடாத வகையில் நீங்கள் அங்கேயே முகாமிடுங்கள் என்று எங்களிடம் அறிவுறுத்தினார்.
மழைநீர் கால்வாய் பணிகள் சுமார் 400 கி.மீ. அளவுக்கு நடந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம்”- ராஜ்நாத் சிங்
பெண்கள் பாதுகாப்பு: காவல்துறையின் புதிய திட்டம்!