பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விழா அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் மக்கள் சந்திப்பு பேரியக்கம் என்ற பெயரில் இன்று(மே29) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “ 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நம்முடைய நாட்டின் உண்மையான சக்தியை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஏழை மக்களால் இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு இல்லை என்பதை மோடி அரசு மாற்றி இருக்கிறது.
கொரோனாவை கையாள்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சொன்னது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தை திறம்பட கையாண்ட நாடு இந்தியா மட்டும் தான். இதற்கு காரணம் நமது பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை தான். 220 கோடி இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் குற்றம் சுமத்த முடியாத அளவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வழி செய்தார் பிரதமர் மோடி. 9.60 கோடி இந்தியர்களுக்கு இலவச எரிவாயு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு விறகு அடுப்பு சமையலால் வரும் நோய்களில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் 3.5 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அண்ணாமலை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “11 மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு சரியாக பராமரிக்கவில்லை. ஜப்பான் புல்லட் ரயிலில் டிக்கெட் விலை அதிகம், அதை முதல்வர் வெளியிடவில்லை” எனவும் விமர்சித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!
”150 வயசு வரைக்கும் இருப்பேன்: ட்ரோல் ஆகும் நாட்டாமை!