மத்திய அரசுக்கு நன்றியும் கண்டனமும் : திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம்!

Published On:

| By Kavi

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நன்றி,  கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எழுதிய ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த் நூலை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவருக்கு வாழ்த்துகள்- நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி.

2) செப்டம்பர் 17 அன்று திமுக தொடங்கப்பட்ட நாளில் சென்னையில் முப்பெரும் விழா கூட்டம் – தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு.

3) முத்தமிழறிஞருக்கு நாணயம் – ஒன்றிய அரசுக்கு நன்றி. அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கலைஞர் நினைவு நாணயம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி!

திரும்பவும் வேகம் எடுத்த தங்கம் விலை…எவ்வளவு கூடியது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share