ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றனர்.
இதனால் இரு பிரிவினரும் தமாகா, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியரசு, “இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ஓபிஎஸ் அவர்களை தவிர்த்து விட்டு அதிமுக வலிமை பெற முடியாது.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக வாக்காளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஏதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த தேர்தலின் மூலமாக கட்டாயமாக பதில் தருவார்கள். வாக்காளர்கள் எடப்பாடி பழனிசாமியை நிராகரிப்பார்கள். அதிமுக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவில்லை என்றால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?: ஐஸ்வர்யா ராஜேஷ்
வேலைவாய்ப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணி!