எடப்பாடி ஆளுநர் சந்திப்பு : தங்கம் கிளப்பும் டவுட்!

அரசியல்

தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 13) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக அரசு மீது புகார் மனு கொடுத்தார்.

கோவை கார் வெடிப்பு, பிரியா மரணம், திமுக அரசு மீதான ஊழல் புகார் என பல்வேறு விவகாரங்கள் அடங்கிய மனுவை கொடுத்தார்.

இதுதொடர்பாக இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநரைச் சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புழுகு மூட்டையாக வழங்கியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவை யார் கைப்பற்றுவது என ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய எஜமானர்களைச் சென்று சந்தித்துவிட்டு வந்த எடப்பாடி பழனிசாமி, தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்பு வந்தவுடன் ஆளுநரை இன்று சந்தித்திருக்கிறார்.

அவர் பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டு மனு அளித்திருக்கிறார்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்றது. கனியமூர் பள்ளி விவகாரம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 13ஆம் தேதி நடந்தது.
இவை எல்லாம் பல்வேறு காலக்கட்டத்தில் நடந்தது. ஆனால் தற்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல் ஆளுநரைப் போய் சந்தித்திருக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம்.

ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து, அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல, இப்போது அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டாபோட்டியில் தனக்கு சாதகமான நிலையை உண்டாக்குவதற்காக ஆளுநரிடம் சென்று முறையிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

இன்னொரு பக்கம் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள் தான் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தைத் தொடர்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக் கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

அதற்கு எந்தவித பதிலடியும் கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்போடு மட்டும் இன்று ஆளுநரைச் சந்தித்திருப்பது ஏன்?.
இப்போதுதான் அவருக்கு விழிப்பு வந்திருப்பதாக நான் எண்ணுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரோன்: வாரிசு படப்பிடிப்பு ரத்தா?

”சந்திரபாபு ஒரு அரசியல் கொள்ளைக்காரர்” : ஜெகன் மோகன் சாடல்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.