நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On:

| By Monisha

thangam thennarasu appointed nellai

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பதிலாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது  குறித்து தமிழக அரசு நேற்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

புகைமண்டலமான நெல்லை: 2 நாட்களாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!

டிஜிட்டல் திண்ணை: புழலுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் ED… செந்தில்பாலாஜி ஸ்டேட்டஸ் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share