“ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் வருது” : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!

Published On:

| By Kavi

thangam thennarasu reply to nirmala sitharaman

தமிழ்நாட்டிடம் இருந்து வாங்கிய நிதியை விட அதிக நிதியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். thangam thennarasu reply to nirmala sitharaman

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறது என புள்ளிவிரங்களோடு பேசினார்.

அப்போது தமிழக அரசு கொடுத்ததை காட்டிலும், அதிக நிதியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்று கூறினார்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 5) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஒன்றிய அரசு 2014 -2023 வரையிலான காலக்கட்டத்தில் 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கியிருக்கிறது. இதில், ரூ.2.46 லட்சம் கோடி மத்திய வரி பகிர்வு, ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் நேரடி வரி வருவாயாக ரூ.6.23லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு தமிழ்நாட்டிடம் இருந்து பெற்றிருக்கிறது. மறைமுக வரி வருவாய் குறித்து அவர்கள் எந்த டேட்டாவையும் பகிர்ந்துகொள்ளவில்லை.

நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்கள் 2014 -2023 வரையில், 2.23 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருந்தால், அவர்களுக்கு மத்திய அரசு 15.35 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். உதாரணம் உத்தரப் பிரதேச மாநிலம்.

அதுபோன்று 12ஆவது நிதிக்குழு காலக்கட்டத்தில் மத்திய வரியில் இருந்து வருவது 5.30 சதவிகிதமாக இருந்தது, 15ஆவது நிதிக்குழுவில் 4.07சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை” என கூறினார்.

மேலும் அவர், ”மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை மகராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு 3,273 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி குறைவு என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

ரயில்வே திட்டங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு கிடைக்கக் கூடிய சலுகை 2.5 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி கொடுத்திருக்கிறார்கள். உபியை (ரூ.17,500) விட இது சிறியளவுதான் அதிகமாகும்.

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ. 1.50 லட்சம் தான் கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு 7 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இதுபோன்று எந்த திட்டமாக இருந்தாலும் தமிழ்நாடு அரசுதான் அதிகமாக கொடுக்கிறது.

ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் 2 மடங்கு அதிகம் கொடுத்தோம்  என்கிறார்கள். ஆனால் பண மதிப்பு, விலைவாசி எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்த்தால், இது குறைவுதான்.

இப்போது நாம் வெள்ள நிவாரணம் 2000 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். நேற்று அமைச்சர் உதயநிதியும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார். மாநில அரசின் நிதியில், இதுவரை ரூ.2027 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு, வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழ்நாடு அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது.” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை!

உங்கள் வங்கிக் கணக்கு ஆக்டிவ் ஆக இல்லையா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்!

thangam thennarasu reply to nirmala sitharaman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share