கூடுதலாக 21 இடங்களில் ’விஜய் நூலகம்’: புஸ்ஸி ஆனந்த்

அரசியல் சினிமா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 11 இடங்களில் ‘விஜய் நூலகம்’ இன்று (நவம்பர் 18) திறந்து வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் ‘விஜய் நூலகத்தினை திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இன்று தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக ’தளபதி விஜய் நூலகம்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு புத்தகப்பை, புத்தகங்கள்  ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் நூலகத் திறப்பு விழாவிற்கு பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “தற்போது தளபதி விஜய் நூலகத்தை தமிழ்நாட்டின் 11 இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி இன்னும் 21 இடங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மாணவர்களின் தேவைக்கேற்ப புத்தகங்களை நூலகத்தில் வழங்குமாறு விஜய் கூறியுள்ளார். காலையில் 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் இந்த நூலகங்களை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”அன்று ஆதரவு கூறியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது”: எடப்பாடி

நொண்டி சாக்கு சொல்லி எடப்பாடி வெளிநடப்பு : தங்கம் தென்னரசு தாக்கு!

 

 

 

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *