திமுகவில் நிர்வாக வசதிக்காக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய, நகர கழகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவின் உட்கட்சி தேர்தலில் பொதுக்குழு கூடி தலைமை நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் 72 மாவட்ட அமைப்புகளில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மட்டும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதேநேரம், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் சிவபத்மநாதனின் வெயிட்டை குறைக்காமல் இருப்பதற்காக வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் தொகுதியை தென்காசி தெற்கு மாவட்டத்தோடு இணைக்கிறார்கள் என்ற தகவலை, ‘முடிவுக்கு வரும் தென்காசி வடக்கு திமுக பஞ்சாயத்து! மா.செ. ரெடி!’ என்கிற தலைப்பில் நேற்று (அக்டோபர் 21) செய்தியாக நம் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அந்த தகவலை முரசொலி நாளிதழ் இன்று உறுதி செய்திருக்கிறது.
திமுகவில் நிர்வாக வசதிக்காக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய, நகர கழகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி) வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், தென்காசி தெற்கு மாவட்டத்தில் கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து, ஜிம்பாப்வே
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!