Tender malpractice case EPS caveat petition

டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ் கேவியட் மனு!

அரசியல்

டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதி மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 20) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக அரசின் முந்தைய ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி  நடைபெற்ற விசாரணையில், ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

மேலும், அந்த தீர்ப்பில், ”2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது.

அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்தவேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.

இச்சூழலில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் , உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பயனர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!

மணிப்பூர் வீடியோவை நீக்க உத்தரவு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *