தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) காலை தொடங்கிய நிலையில், இம்மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தொடர்ந்து இருமுறை முதல்வராக இருக்கும் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி கடுமையான பின்னடைவில் இருக்கிறது.
காலை10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆளும் கேசிஆர் கட்சி 37 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக 9 இடங்களிலும் ஓவைசி கட்சி இரு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து காங்கிரஸே முன்னிலை வகிக்கிறது. மேலும் முதலமைச்சர் கே.சி.ஆர். தான் போட்டியிட்ட காமரெட்டி, கஜ்வெல் தொகுதிகளில் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
இன்று காலை 10 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையின் முதல் ரவுண்டு முடிவில் முதலமைச்சர் கே.சி.ஆர்,. காமரெட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியை விட 2 ஆயிரம் ஒட்டுகள் பின் தங்கியிருக்கிறார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…