தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது மாலை 4 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக கட்சி 9 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது.
இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாஜக வேட்பாளர் வேங்கட ரமண ரெட்டி ஆகிய மூவரும் காமாரெட்டி தொகுதிக்கு போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி தொடர்ந்து அங்கு முன்னிலை வகித்து வந்த நிலையில், வேங்கட ரமண ரெட்டி அவரை வீழ்த்தி முதல் இடத்துக்கு வந்துள்ளார்.
முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த கேசிஆரை 3-வது இடத்துக்கு தள்ளிய வேங்கட ரமண ரெட்டி தற்போது காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
13 சுற்றுகளின் முடிவில் வேங்கட ரமண ரெட்டி 41,668 வாக்குகளுடன் முதல் இடத்திலும், ரேவந்த் ரெட்டி 41,043 வாக்குகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இருவருக்கும் இடையில் 625 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. முன்னாள் முதல்வர் கேசிஆர் 40,262 வாக்குகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
மொத்தமுள்ள 16 சுற்றுகளில் இன்னும் 3 சுற்றுகள் மட்டுமே மீதமிருப்பதால் காமாரெட்டியை சொந்தமாக்கி கொள்ளப்போவது காங்கிரஸா? இல்லை பாஜகவா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
தமிழ்நாட்டில் அதி கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மோடிக்கு பன்னீர் வாழ்த்து: பாஜகவின் வெற்றி அதிமுகவில் எதிரொலிக்குமா?