telangana ex cm k chandrasekar rao hospitalised

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

அரசியல்

கீழே விழுந்ததில் காயமடைந்த தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் உருவாகி  முதல் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி.

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று நம்பிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றியால், ’தென்னிந்தியாவில் முதல்முறையாக ஹாட்ரிக் ஆட்சி அமைத்த முதல்வர்’ என்ற பெருமையை இழந்தார் கே.சந்திரசேகர் ராவ்.

தோல்வியைத் தொடர்ந்து எர்ரவெல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (டிசம்பர்7) இரவு அவர் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு இடது இடுப்பு எலும்பு முறிந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கே.சி.ஆர். ஹைதராபாத் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. அதே வேளையில் கேசிஆர் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கே.சி.ஆரின் உடல்நிலை குறித்து அவரது மகளும், பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ வுமான கவிதா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பிஆர்எஸ் தலைவர் கே.சி.ஆருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் நிபுணர்களின் கண்காணிப்பில் உள்ளார். உங்களது ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி. அப்பா விரைவில் குணமடைவார்” என்று கவிதா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செங்கல்பட்டில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்!

மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை!

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் 51!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *