தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தெலங்கானாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தெலங்கானா தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு திமுகவின் தொண்டர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து திமுக தொண்டர்களும், அணி நிர்வாகிகளும் செயற்குழு அமைத்து இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு!
Bigg Boss 7 Day 50: மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!