தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததையடுத்து, அவரை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்தநிலையில், ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு இன்று மதியம் நேரில் சென்ற டிஜிபி அஞ்சனி குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்..
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை டிஜிபி அஞ்சனி குமார் எப்படி சந்திக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்,
இந்தநிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா தேர்தல் களத்தில் டிஜிபி சஸ்பெண்ட் விவகாரம் முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்ஷன்!
புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!