தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது இன்று (டிசம்பர் 3) நடைபெற்று வருகிறது.
இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம் தெலங்கானாவில் முன்னிலை வகித்து வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி தெலங்கானாவில் காங்கிரஸ் 63, பாரத் ராஷ்ட்ரிய சமிதி 40, பாஜக 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தெலங்கானாவில் முன்னிலை பெற்று வருவது அக்கட்சியினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டில் அதி கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மகளிர் பிரதேசமான மத்திய பிரதேசம்