சிறையில் அடைப்பேன் என மிரட்டுவதா? – மோடியை சாடிய தேஜஸ்வி

அரசியல்

“பிகார் மக்கள் குஜராத் மக்களை பார்த்து பயப்படமாட்டார்கள்” என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் கரகாத் பகுதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “பிகாரில் கொள்ளையடித்தவர்களை என்டிஏ அரசு சும்மா விடாது. ஏழை மக்களின் வளங்களையும், நிலங்களையும் கொள்ளையடித்தவர்கள் ஜெயிலுக்கு செல்லும் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இது மோடியின் கேரண்டி” என்று தெரிவித்திருந்தார்.

மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், “பிரதமர் மோடி பிகாருக்கு வந்து எங்களை ஜெயிலுக்கு அனுப்பப்போவதாக மிரட்டுகிறார்.

அவர் நீதிமன்றங்களுக்கு மேலானவரா? அவரது பேச்சின் மூலம் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவருக்காக வேலை செய்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. அனைத்து விசாரணை அமைப்புகளையும் மோடி அழித்துவிட்டார்.

பிகார் மக்கள் குஜராத் மக்களை பார்த்து பயப்படமாட்டார்கள். எங்களது கடவுள் கிருஷ்ணர் ஜெயிலில் தான் பிறந்தார்.

75 வயது முதியவர் 34 வயது இளைஞரை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் பிகார் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தேஜஸ்வி யாதவை பிரதமர் மோடி எப்படி ஜெயிலுக்கு அனுப்ப முடியும்?

மோடியின் உத்தரவின் பேரில் விசாரணை அமைப்புகள் இயங்கி வருகின்றன என்று தொடர்ந்து நான் கூறி வருகிறேன். மீண்டும் ஒருமுறை அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நமது ஜனநாயக செயல்முறைகள் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன என்பது பிரதமரின் பேச்சில் தெரிகிறது. அவரது பேச்சு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாகும், ஆனால், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவுடன் இணையும் நடிகை – யாருன்னு தெரியுமா?

தேர்தலுக்கு பிறகு… அண்ணாமலை தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *