“உறுதிமொழி பிடிச்சிருந்தா உறுப்பினரா சேருங்க” : விஜய் அழைப்பு!

Published On:

| By Kavi

Vijay invited to join as a member

Vijay invited to join as a member

தமிழக வெற்றிக் கழகத்தின் சேவையை நடிகரும், அக்கட்சித் தலைவருமான விஜய் இன்று (மார்ச் 8) தொடங்கி வைத்தார்.

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்து பணிகளை செய்து வருகிறார் விஜய்.

தனது கட்சியில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்துள்ளார் விஜய்.

படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்தாலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் தொடர்ந்து ஆலோசித்து கட்சி வேலைகளையும் கவனித்து வருகிறார்.

இதன் ஒருபகுதியாக நேற்று, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கினார். இந்த அணியின் மாநில செயலாளராக சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக எஸ்.என் யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று(மார்ச் 8) மாலை உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கட்சியின் உறுதிமொழியை படித்துவிட்டு பிடித்திருந்தால் சேருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி. தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள்.. தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்” என்ற உறுதிமொழியையும் வெளியிட்டுள்ளார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

IPL 2024: ஒரு அணிக்கு எதிராக அதிக ‘டக்-அவுட்’ ஆன வீரர்கள்!

INDvsENG : 147 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை… இந்திய வீரர்கள் அபார சாதனை!

Vijay invited to join as a member

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share