சென்னை தலைமை செயலகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்து 14 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கடும் கண்டனம் தெரிவித்தன.
நேற்று சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் சட்ட மசோதா குறித்து 14 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம், அரசு ஊழியர் சங்கம், ஐஎன்டியூசி உள்ளிட்ட 14 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
செல்வம்
‘அயலான்’ அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்