dgp bk ravi going to join congress

காங்கிரஸில் இணைகிறார் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி!

அரசியல்

டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில்  முன்னாள் டிஜிபி பி.கே.ரவி  இன்று (நவம்பர் 1) மாலை காங்கிரஸில் இணைகிறார்.

தமிழ்நாட்டில் மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்தவர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான  பிரஜ் கிஷோர் ரவி என்ற பி.கே.ரவி.

அவர் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற பி.கே.ரவி அரசியலில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அவர் காங்கிஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளார்.

பீகாரைச் சேர்ந்தவரான பி.கே.ரவி தனது சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

dgp bk ravi going to join congress
டிஜிபி கருணாசாகர்

ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

1989ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பி.கே.ரவி, தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாகவும், ஐநா அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சஞ்சய் அரோராவுக்குப் பிறகு, தமிழ்நாடு டிஜிபி பதவிக்கான போட்டியில் இரண்டாவது மூத்த அதிகாரியாக இருந்தவர் பி.கே.ரவி. அவர் தற்போது  விருப்ப ஓய்வு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் பணியாற்ற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தீபாவளி பண்டிகை: நவம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்!

அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மோதல்: 12 பேர் கைது!

“அவர்களுக்கு தெரியாது”: தோனி சொன்ன குட்டி ஸ்டோரி… வைரலாகும் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *