political leaders wished rajinikanth

’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

அரசியல் சினிமா

தமிழ் திரையுலகம் கடந்த இந்திய ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். political leaders wished rajinikanth

இதனை முன்னிட்டு சமூகவலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.”

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

”அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.”

Rajinikanth, Kamal Haasan shoot their films in same studio after 21 years - Hindustan Times

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

”இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.”

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

“அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை துவங்கி பத்மபூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதாசாகிப் பால்கே என பல விருதுகளைப் பெற்று, நம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.”

திமுக எம்.பி. தயாநிதி மாறன்

”இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!”

காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த்

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.”

Image

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

“எனது அன்பு நண்பர், நல்ல மனிதர், பண்பாளர், சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

”தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…. பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

”தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சார்-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது கலையுலகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும் – நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஷாருக்கான், விஜய் படங்கள்!

political leaders wished rajinikanth

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0