டிஜிபிக்கு அண்ணாமலை பதில்!

அரசியல்

கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், காவல்துறை திமுக அறிவாலயமாகச் செயல்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக அவதூறு பரப்பி வருகிறார் என்று நேற்று (அக்டோபர் 29) டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், ”உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி, முன்னாள் கர்நாடக காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, தமிழக காவல்துறைக்குக் களங்கம் கற்பிக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை திமுகவினர் போல் செயல்படுகிறார்கள்

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.

காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது.

ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களை காப்பாற்றிக் கொள்ள பத்திரிக்கை செய்தி

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே, ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும்.

பல பெருமைகளுக்குப் பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர்” என்று கூறியுள்ளார்.

மோனிஷா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சரவை ஒப்புதல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *