முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜனவரி 23) காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.
இந்தசூழலில், வரும் ஜனவரி 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
இதுகுறித்து கடந்த ஜனவரி 19-ஆம் தேதி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில், “வரும் ஜனவரி 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை அறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டம், பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.
ஒவ்வொரு துறைகளிலும் எந்தெந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிகிறார். பின்னர், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புள்ளியல் பணியிடங்களில் அலட்சியம் காட்டும் டிஎன்பிஎஸ்சி: ராமதாஸ்