பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை!

அரசியல்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று (அக்டோபர் 30) மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு வந்த அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வம்

‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை!

டிஜிபிக்கு அண்ணாமலை பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.