நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதன்படி, தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில், தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம். இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி வருகை தந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலையின் பேச்சு வெடிகுண்டை போன்றது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
கூட்டாட்சி தத்துவத்தின் சாம்பியனாக ஒருவர் இருந்தார்…. டெல்லியில் மோடியை விமர்சித்த பிடிஆர்