முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 25) அந்நாட்டு உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
நேற்று (மே 24) சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறும் சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து சிங்கப்பூர் தமிழ் சங்கங்களுடன் இணைந்து நடைபெற்ற பண்பாட்டு நிகழ்ச்சியில் ‘வேர்களைத் தேடி’ என்ற அயலக தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இன்று (மே 25) சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் புறப்பட உள்ளார் முதலமைச்சர். இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ள சண்முகத்தை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர்.
இந்த சந்திப்பின் போது சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, சிங்கப்பூர் – மதுரை நேரடி விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மோனிஷா
கள் இறக்குவதற்கு அனுமதி?: அமைச்சர் கூறிய தகவல்!
‘தமிழ் ஒவ்வொரு இந்தியனின் மொழி’: பிரதமர் மோடி