“தமிழக முதல்வர் ஒரு பொம்மை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மதுரை என்றாலே அது, அதிமுகவின் எஃகு கோட்டை. இந்த மதுரையில் நாம் கடந்த தேர்தலில் 50-50 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இதேபோல் வெற்றிபெற்றிருந்தால் அதிமுகதான் ஆட்சியில் இருந்திருக்கும். சற்றுக் கவனக்குறைவாக இருந்த காரணத்தினாலே அந்த இடத்தை திமுக கைப்பற்றிவிட்டது.
திமுக ஒன்றும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறவில்லை. வெறும் 125 இடங்களில்தான் வெற்றிபெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது.
ஏனென்றால், தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. இன்று தமிழகத்தை ஆளும் முதல்வர் திறமையில்லாதவர். அவர், ஒரு பொம்மை முதல்வர்.
வீடுகளில் குழந்தைகளுக்கு கீ கொடுத்து விளையாட வைக்கும் பொம்மை போன்றவர் அவர். அதுபோல், அவருக்கு காலையில் கீ கொடுத்துவிட்டால் மாலை வரை தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்.
அதனால் ஒரு பயனும் இல்லை. அவர் பதவியேற்று 16 மாதங்களாகியும் ஒரு பயன் இல்லை. மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை.
திமுகவுக்கு மக்கள் தவறி வாக்களித்துவிட்டார்கள்.
அதை எண்ணி எண்ணி மக்கள் வருத்தப்படுகிறார்கள். எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவுச் சின்னம் வைக்கிறார்கள்.
ஏனென்றால், பூமியில் வைத்தால் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்றெண்ணி கடலில்போய் வைக்கிறார்கள்.
இதுதான் முதல்வரின் சாதனை. அதிலும் சுயநலம் இருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பொன்னியின் செல்வனுக்காக எம்.ஜி.ஆர். போராடியது ஏன்?
சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன், பெண்களின் செல்வன் ஆக காரணம்!