நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 12) தற்கொலை செய்து கொண்டார், இதன் தொடர்ச்சியாக அவரது தந்தையும் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் இன்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ நீட் தேர்வுல நான் ஜஸ்ட் பாஸ். என்னால நீட்ல 160 மார்க் தான் எடுக்க முடிஞ்சுது. எங்க அப்பா பொருளாதார அடிப்படையில கொஞ்சம் நல்ல நிலைமையில இருந்ததால என்ன 25 லட்சம் ரூபா கட்டி மருத்துவ கல்லூரியில சேத்து விட்டாரு.
காசு இருக்குறவன் டாக்டரா ஆக முடியும்னா…அவன் நெக்ஸ்ட் என்ன பண்ணுவான் காசு எடுக்குறதுல தான் இருப்பானே தவிர மக்களுக்கு பணி செய்றதுல இருக்க மாட்டான்.
நீட் தான் உண்மையான டாக்டர உருவாக்குற தேர்வுனா இத்தன நாளா நீங்க பார்த்த டாக்டர்ஸ்லாம் என்ன போலியானவர்களா? என்னோட கூடவே இருந்த ஜெகதீஸ் நல்லா படிக்கிற பையன்.
ரெண்டு அட்டம்ப்ட்ல என்ன விட நெறய மார்க் எடுத்த பையன். அவனால 25 லட்சம் கட்டி சேர முடியலனா.. இங்க எல்லாமே பொருளாதார அடிப்படையில தான் இருக்கு.
அவன் இந்த அட்டம்ப்ட்ல 400 மார்க். அவனால மருத்துவ படிப்புல சேர முடியலை. இந்த தேர்வ வச்சு என்ன தான் சாதிக்க போறீங்க. இன்னும் எத்தன பசங்கள இந்த மத்திய அரசு சாவடிக்க போறாங்கனு தெரியல.
எங்கங்கயோ நடந்தப்போ அதிர்ச்சியா இல்ல ஆனா எங்க கூட இருந்தவனுக்கு இப்டி ஆகும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
மக்களுக்கு சேவை செய்யனும்னு தான் அவன் டாக்டருக்கு படிக்க ஆச பட்டான். ஒரு கட்டத்துல அப்பாவுக்காகவாவது டாக்டர் ஆயிடனும்டானு சொல்லிட்டு இருப்பான்.
அவனுக்கு வெளிநாட்டுல இருந்து கூட டாக்டர் படிக்கிறதுக்கு அழைப்பு வந்துச்சு. ஆனா தமிழ்நாட்டுல படிக்கனும் அப்டின்றது தான் அவனோட ஆச.
15 நாளுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணும் போது…”மச்சான் உனக்கு கெடைக்கிற இந்த வாய்ப்பு எல்லாத்துக்கும் கெடச்சுடாதுடா. நீ படிக்கிறது கனவு டா.. அதனால படிச்சு முடிச்சுட்டு மக்களுக்கு பணி செய்டா” அப்டினு சொன்னான்.
அந்த மாதிரியான ஒரு மனநிலை உள்ள மாணவன் அவன். இந்த நீட்ட வச்சு என்னத்த தான் நீங்க சாதிக்க போறீங்கனு தெரியல” என்று கண்ணீருடன் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!
நீட் பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையா ஆளுநர்?- சந்தேகம் எழுப்பும் முதல்வர்!