தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 4ஆம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கடந்த 14ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. இதில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். தவிர, சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டது.
கூடுதலாகவும் சில அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 35 பேர் கொண்ட அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
அதேநேரத்தில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை, வெண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
ஜெ.பிரகாஷ்
பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!
திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்