தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

அரசியல்

தமிழக அமைச்சரவை கூட்டம் , முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 14 ) தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள முக்கிய சட்டத் திருத்தங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் துறைவாரியாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், அத்திட்டங்களின் நிலை என்ன, எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த முன்னெச்சரிக்கைப் பணிகள், சென்னையில் நிறைவேற்றப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. புதிய தொழிலுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

முக்கியமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்களும் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது

மு.வா.ஜெகதீஸ் குமார்

அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?

இனவெறி தாக்குதல்: தீவிர சிகிச்சையில் இந்திய மாணவர்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *