முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 15) மாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வரும் மார்ச் 20ஆம் தேதி 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதுதொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

ஆளுநர் அலட்சியமாக இருக்க கூடாது: சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share