பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!
2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 20) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
மேலும், சிலிண்டருக்கான ரூ. 100 மானியம், பெட்ரோல், டீசல் வரி குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு சபாநாயகர் அறையில் அலுவல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அலுவல் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படவுள்ளது.
மோனிஷா
பாலியல் அத்துமீறல்: பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது!
சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!