தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? தேதி அறிவித்த அப்பாவு

Published On:

| By christopher

tamilnadu budget date announced

தமிழ்நாடு பட்ஜெட் 2025 வரும் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு இன்று (பிப்ரவரி 18) அறிவித்துள்ளார். tamilnadu budget date announced

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைகள், அது சார்ந்த அமைப்புகளுடன் இன்று முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1-இன் கீழ், தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தினை தலைமைச் செயலக வளாகத்தின் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து மார்ச் 14 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணிக்குக் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.

மேலும், பேரவை விதி 193/1-இன் கீழ் 2025 -2026-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189/1-இன் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினையும் மார்ச் 21, 2025 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்” என்று அப்பாவு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share