அமெரிக்காவில் இருந்து ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலை

அரசியல்

ட்விட்டர் ஸ்பேஸில் ’மாற்றத்தை நோக்கி தமிழகம்’ என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 8) இரவு 8 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றவுள்ளார்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவர் தலைமைப் பண்புப் பயிற்சி, அரசியல் மேலாண்மை உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார். மேலும், அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார்.

அவர், தமிழக நிலவரம் குறித்து அடிக்கடி பேட்டி கொடுப்பார் அல்லது அறிக்கை வெளியிடுவார். குறிப்பாக, தமிழக அரசை விமர்சித்து கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்வார். ஆனால், கடந்த ஒரு வார காலமாக அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 8) இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் ’மாற்றத்தை நோக்கி தமிழகம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற இருக்கிறார்.

இதில், அண்ணாமலை என்ன பேசவிருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோனிஷா

ஒருநாள் போட்டி: தீபக் சாஹருக்கு விளையாடபோவது யார்?

’பொன்னியின் செல்வன்’ வெற்றியில் உதயநிதி பங்கு என்ன?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.