டெல்லி சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசி வருகிறார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை டெல்லி தலைமை அழைத்தது.
அதன்படி நேற்று (அக்டோபர் 1) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை.
வரவிருக்கும் 5 மாநில தேர்தல் தொடர்பாக டெல்லி பாஜக தலைமை ஆலோசனையில் இருந்ததால் அவர்களை அண்ணாமலையால் சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று பிற்பகல் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசினார்.
இந்தசூழலில் இன்று இரவு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி வருவதாகவும், நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பார்த்து பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டமும், நாளை மறுநாள் கோவையில் மீண்டும் தொடங்க இருந்த என் மண், என் மக்கள் யாத்திரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாரிமுத்துவுக்கு பதில் இவர்தான்… உறுதி செய்த எதிர்நீச்சல் டீம்!
பாஜக அதிமுக கூட்டணி முறிவு : முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி