ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்தார். இதில் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்று ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்குத் தனி வரவு செலவு திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆண்டு வேளாண் துறை சார்பாகத் தனி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல இந்த ஆண்டும் நாளை (மார்ச் 21) வேளாண் துறை அமைச்சர் தனி வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
தொடர்ந்து இந்த மாதம் 23, 24 மற்றும் 27, 28 ஆகிய நான்கு தேதிகளில் மேற்கண்ட இரண்டு நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதங்கள் நடத்தப்பட்டு, அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள். மார்ச் 28 ஆம் தேதி அமைச்சர்களின் பதிலுரையோடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும்.
தொடர்ந்து மார்ச் 29 ஆம் தேதி மானியக் கோரிக்கைகள் ஆரம்பித்து அடுத்த மாதம் ஏப்ரல் 21 வரை நடைபெறும்” என்று பேசினார்.
மோனிஷா
பட்ஜெட்: குடிமைப் பணி தேர்வு… ஆண்டுக்கு 1000 மாணவர்கள்
தமிழக பட்ஜெட்: “வெளிச்சம் தராத மின்மினிப் பூச்சி”: எடப்பாடி விமர்சனம்!
Comments are closed.