தக்காளிக்கு ரூ.19 கோடி, வெங்காயத்துக்கு ரூ.29 கோடி!

அரசியல்

தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில் முக்கிய அம்சமாக ஆண்டு முழுவதும் மக்களுக்குத் தக்காளி வெங்காயம் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க ரூ.19 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

வெயில் மற்றும் மழைக் காலங்களில் தக்காளி, வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரிக்கும். இந்த சூழலில் பட்ஜெட்டில் வெங்காயம் மற்றும் தக்காளிக்கு மொத்தமாக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரியா

வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

சிறுதானிய திருவிழா: நிதி எவ்வளவு?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *