16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

Published On:

| By Selvam

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப் தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம்.

தமிழ்நாடு பால் உற்பத்தி கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை இணை ஆணையர் சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணுசந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனி மேரி ஸ்வர்னா, புதுக்கோட்டை மெர்சி ரம்யா, நாமக்கல் உமா, திண்டுக்கல் எம்.என்.பூங்கொடி, சிவகங்கை ஆஷா அஜித், காஞ்சிபுரம் கலைச்செல்வி மோகன், புதுக்கோட்டை மெர்சி ரம்யா ஆகியோர் புதிய மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செல்வம்

விமர்சனம்: குட்நைட்!

ரவி தேஜாவின் “டைகர் நாகேஸ்வரராவ்” அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel