ரயில்வே துறை அமைச்சரிடம் தமிழிசை வைத்த முக்கிய கோரிக்கை!

Published On:

| By Selvam

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (பிப்ரவரி 9) கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்து புராணங்களின்படி இந்த புனிதமான திருவிழா முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்பார்கள். Tamilisai urges Ashwini Vaishnaw

ஆனால், அவர்கள் திருச்செந்தூர் செல்ல நேரடி ரயில்கள் இயக்கப்படவில்லை. அதனால், 9 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக கோவை, திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு பிப்ரவரி 11-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். Tamilisai urges Ashwini Vaishnaw

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share