புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது.
நீரழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, நரம்பு பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மாத்திரைகளை, தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை நிறுத்தியதால் அங்கு சிகிச்சைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்றும், இருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்,புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று (செப்டம்பர் 22 ) மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன், ’ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததையடுத்து ஆலோசனை நடத்தினோம்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
புற நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மருந்து இல்லை என சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
இந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்பட்டாலும், அத்தகைய சூழ்நிலை உருவாவதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தது தவறு” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மொழிகளைக் கடந்த மொழியை கௌரவிப்போம்: உலக சைகை தினம்!
டிஜிட்டல் திண்ணை:சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்! சபரீசன் வைக்கும் புது செக்!