“ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்” : தமிழிசை இரங்கல்!

அரசியல்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 28) தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

நல்ல திரைப்படக்கலைஞர்….
நல்ல அரசியல் தலைவர்….
நல்ல மனிதர்….
நல்ல சகோதரர்….
ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

விஜயகாந்த்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தேமுதிக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்த் உடல்!

விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0