நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும்போது விளை நிலங்களில் பயிர்கள் அழிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நிறைய கோவில்களை பராமரிப்பதில்லை. கோவில்களை பாதுகாக்க வேண்டும். கோவில்கள் இல்லையென்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்ததே ஆன்மிகம் தான்.
தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் தமிழை வளர்த்தவர்கள் ஆன்மிகவாதிகள் இல்லை என்பது போலவும் தோற்றம் உள்ளது. அந்த தோற்றம் களையப்பட வேண்டும்” என்றவரிடம் நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் நிலம் கையக்கப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“பயிர்களை அழிப்பதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. பயிர் உயிருக்கு சமம். பயிர் வளர்ந்து முடியும் வரை என்.எல்.சி நிர்வாகம் காத்திருக்க வேண்டும். விளை நிலங்களை கையகப்படுத்தியதில் நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஏன் இடைவேளை இருந்தது. அதனை அவர்கள் சரி செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படவில்லை” – எடப்பாடி