அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 106-வது பிறந்தாளை முன்னிட்டு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று (ஜனவரி 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் மிகவும் மரியாதையாகப் பார்க்கக்கூடிய ஒரு தலைவராக எம்ஜிஆர் உள்ளார். கட்சி எல்லை கடந்து அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை அவர் தான் விரிவுபடுத்தினார். எம்ஜிஆர் நல்ல கனவோடு அதிமுகவை வழிநடத்தி வந்தார். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.” என்றார்.
மேலும், எம்ஜிஆர் தேசிய தலைவரா, திராவிட தலைவரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் தேசியம் போற்றிய திராவிட தலைவர்.” என்று கூறினார்.
செல்வம்
“சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை” – முரளி விஜய்
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோகம்: முதல்வர் ஆறுதல்!