“எழுத்தாளர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை, சமத்துவபுரங்களில் ஒதுக்கினால் அங்குள்ளவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
“மாவட்ட அளவில் வீடு இல்லாத மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு சமத்துவபுரம் ஒவ்வொன்றிலும் 10 வீடுகளை அவர்களுக்கென ஒதுக்கலாம். அவர்களின் வறுமையோடு சமத்துவபுரங்களின் பண்பாட்டு வறுமையைப் போக்கவும் அது உதவும். இதை தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று (நவம்பர் 22) அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் டி.ரவிக்குமார், ”எழுத்தாளர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை ஏன் சமத்துவபுரங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ ஒதுக்கக்கூடாது? அங்கு உள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பதோடு சமத்துவம் குறித்த சிந்தனை எழுத்தாளர்களுக்கும் உருவாகுமே” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பாஜக நடவடிக்கை: திமுகவை விமர்சித்த குஷ்பு!
திகார் சிறையில் வெரைட்டி உணவு: அமைச்சரின் அடுத்த வீடியோ!