தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 13 ) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டில் டெல்லியில் தமிழ் புத்தாண்டை ஒட்டி விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதையும் அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பதையும் கடந்த ஏப்ரல் 10ம் தேதியே டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்! என்ற தலைப்பில் exclusive தகவல்களை மின்னம்பலம்.காமில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 13 ஆம் தேதி அதாவது பங்குனி 30, டெல்லி காமராஜர் லேன்.எண் 1 இல் அமைந்துள்ள தனது பங்களாவில் தமிழ் புத்தாண்டு திருவிழாவை நடத்தி உள்ளார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

இதில் பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பாஜக சட்ட மன்ற உறுப்பினர்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி , தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை புறக்கணித்துவிட்டார்.
கடந்த ஏழு நாட்களாக டெல்லியில் இருந்து விட்டு இன்று மாலை சென்னை வந்துவிட்டர் அண்ணாமலை. எல். முருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தமிழ் புத்தாண்டு திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்காதது அக்கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம்!
டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!