ஆளுநர் மாளிகையில் இன்று (செப்டம்பர் 29) புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோருக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செந்தில் பாலாஜிக்கு அவர் முன்பு வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.ராமச்சந்திரனிடம் இருந்த சுற்றுலாத்துறை பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் அமைச்சர்களாக பதவியேற்பு!
“மதவாத, பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து களமாடுவேன்”… மனோ தங்கராஜ்