இரட்டை இலையில் யார் நிற்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு தருவோம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைவர்கள், கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி தங்கமணி திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவு கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன்,
தமிழக முன்னேற்றக் கழகம், அதிமுகவுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. யாரை அவர்கள் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்யவோம்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். ஓ.பன்னீர்செல்வம் மாலை என்னை சந்திக்க இருக்கிறார்.
அப்போது அவருடன் கலந்துரையாடி இரண்டு பேரையும் இணைப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இருவரும் பிரிந்திருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய ஆசை, மக்களுடைய ஆசை என்று தெரிவித்தார்.
கலை.ரா
தந்தை மீது படுத்து பியானோ வாசித்த லிடியன்
போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக அறிவிப்பு!