ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, ராமநாதபுரம் தொகுதி தொடர்பான பல்வேறு ரயில்வே கோரிக்கைகளுக்காக மனு அளித்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும், எம்பியுமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தில்,
பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவடையவில்லை. அது, இன்னும் திறக்கப்படாமல் இருப்பதினால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், ராமேஸ்வரம் பகுதிக்கு செல்லும் பயணிகள், அங்குள்ள திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, பாம்பன் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகள் மிகவும் பழைய பெட்டிகளாக இருப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ரயில் பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகளாக அமைக்க நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சென்னை – ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும். இதற்காக, மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2வது கட்ட கல்வி விருது விழா… மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா விஜய்?
சென்னையில் தீக்கிரையான அரசு ஏ.சி பேருந்து: காரணம் என்ன… அரசு விளக்கம்!
வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: டாய்லெட்டுக்குள் செல்போனுடன் செல்பவரா நீங்கள்?