தமிழகம் இருளில் மூழ்கியிருப்பதாகவும், பாஜக வெளிச்சம் தரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வேலூரில் நடைபெற இருக்கும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள் துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு அமித்ஷா சென்றார். அப்போது ஜிஎஸ்டி சாலையில் மின் தடை ஏற்பட்டது.
அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்தப் பாதையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதே மின் வினியோகம் தடைப்படக் காரணம் என்று தமிழக மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி கூறினார்.
இந்தச்சூழலில் இன்று(ஜூன் 11) கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென் சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “இப்படி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுவது புதிதும் அல்ல. மின்சாரம் துண்டிப்பு என்பது தமிழகம் இருளில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்திற்கு பாஜக வெளிச்சம் தரும்” என்று கூறினார்.
பிரியா
“தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்” – டிகேஎஸ் இளங்கோவன்
தமிழகத்தில் இருந்து பிரதமர் : அமித் ஷா பேச்சு!