தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள ஷிவ் தாஸ் மீனா, ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாசலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி நியமிக்கப்படுகிறார்.
அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
சமூக நலத்துறை கமிஷனராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறை துணை இயக்குனராக சிம்ரஜித்சிங் நியமனம்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குனராக உமா சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வம்